அமீர்கானின் தந்தை தாஹீர் ஹுசைன் மரணம்!

மும்பை பாந்தரா பகுதியில் உள்ள அமீர்கானில் வீட்டில் இருந்த போது இன்று காலை தாஹீருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
மனைவி கிரணுடன் அமெரிக்கா சென்றுள்ள அமீர்கானுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் இருவரும் அடுத்த விமானத்தில் மும்பை வந்து சேருவார்கள் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அமீர்கான், ஃபைசல் என்ற 2 மகன்கள், ஃப்ரஹாத், நிகாத் ஆகிய மகள்கள் என 4 பேர் மற்றும் மனைவியுடன் தாஹீர் ஹுசைன் வசித்து வந்தார்.
கடந்த 1990ம் ஆண்டில் அமீர்கான்-ஜூஹிசாவ்லா ஜோடியை வைத்து 'தும் மேரே ஹோ' படத்தை முதல்முறையாக இயக்கினார் தாஹீர் ஹுசைன்.
Comments


Click it and Unblock the Notifications