பெண் டிவி காம்பியர் மீது ஆசிட் வீ்ச்சு- பார்வை பறிபோனது
சென்னை: சென்னையில் பொதிகை டிவியில் காம்பியராக இருக்கும் 20 வயது பெண் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆசிட் வீசினார். இந்த சம்பவத்தில் அந்த பெண்ணின் வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தீபா (20). இவர் பொதிகை டிவி நிறுவனத்தில் காம்பியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது ஒரு மர்ம நபர் வெளியிலிருந்து கூரியர் வந்தி்ருப்பதாக கூறி கொண்டே அழைப்பு மணியை அடித்துள்ளார்.
இதையடுத்து தீபா கதவை திறந்துள்ளார். அப்போது அந்த நபர் சற்றும் எதிர்பாராத வகையில் தீபாவின் முகத்தில் கையில் வைத்திருந்த ஆசிட்டை வீசிவிட்டு, தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் தீபாவின் முகம் வெந்து போனது.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கண்ணில் பாதிப்பு அதிகமிருக்கிறது, அதனால் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைக்கு அழைத்து போகுமாறு ஆலோசனை கொடுத்துள்ளனர்.
பின்னர் அவர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிரார்.
இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் காந்திமதி கூறுகையில், அந்த பெண்ணின் வலது கண் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அவரது ஒரு கண் பார்வையை இழந்துவிட்டது என்றார்.
காதல் தோல்வி காரணமா...
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், தீபாவுக்கு அப்பகுதியில் இரண்டு நண்பர்கள் உண்டு என்று தெரிய வந்தது. மேலும், அவர்களுக்கு முன்பாக நாகராஜன் என்பவரை தீபா காதலித்துள்ளார்.
ஆனால் பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால், நாகராஜனும், தீபாவும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர் என்ற விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து நாகராஜனிடம் போலீசார் விசாரித்த போது, எங்கள் காதலை பெற்றோர்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதால், பிரிந்து விட்டோம். அதன்பின்னர் எனக்கும் தீபாவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











