twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு தலைமறைவு? சிங்கமுத்துவிடம் விசாரணை!!

    By Shankar
    |

    Vadivelu
    சென்னை: நிலமோசடி புகார் தொடர்பாக வடிவேலுவிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடி வருகிறார்கள். ஆனால் நேற்றே தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

    எனவே அவருக்கு நிலம் வாங்கிக் கொடுத்த சக காமெடி நடிகர் சிங்கமுத்துவிடம் விசாரணையை ஆரம்பித்துள்ளனர் போலீசார்.

    காமெடி நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் நில மோசடி புகார் அளித்துள்ளார்.

    இந்தப் புகார் தொடர்பாக வடிவேலுவையும் அவர் மனைவி விசாலாட்சியையும் விசாரிக்க முடிவு செய்த போலீஸ் அது தொடர்பான சம்மனை வழங்கச் சென்றபோது, வடிவேலு இல்லை.

    ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரது உறவினர்கள், உதவியாளர்கள் யாரும் எதுவும் சொல்ல மறுக்கிறார்களாம்.

    வடிவேலுவின் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது.

    சிங்கமுத்துவிடம்...

    இதைத் தொடர்ந்து இந்த நிலத்தை வடிவேலுவுக்கு வாங்கிக் கொடுத்த சிங்கமுத்துவிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரும் விசாரணைக்கு வர சம்மதித்துள்ளார்.

    இதுகுறித்து சிங்கமுத்து கூறுகையில், "வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார்.

    பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது," என்றார்.

    இதற்கிடையே வடிவேலுவைத் தேடி அவரது மதுரை வீட்டுக்கும் போலீசார் விரைந்துள்ளனர்.

    English summary
    The Chennai suburban police have started their search for Vadivelu in a land grabbing case filed by a former bank official. Meanwhile, Vadivelu's one time friend and present foe Singamuthu turned up for police interrogations in this case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X