நடிகை பாக்யாஞ்சலிக்கு செக்ஸ் தொல்லை: முன்ஜாமீன் கேட்டு வில்லன் நடிகர் மனு!

By Sudha

சென்னை: கேரள நடிகை பாக்யாஞ்சலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த விவகாரத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் வில்லன் நடிகர் வேலு.

பாக்யாஞ்சலி, வேலு இருவரும் யாரென்றே தெரியாமலிருந்தது, நான்கு தினங்களுக்கு முன்பு வரை. இன்றோ மீடியா முழுக்க அவர்களைப் பற்றிய செய்திகளே.

வில்லன் நடிகர் வேலு, தனக்கு செக்ஸ் மிரட்டல் கொடுப்பதாகவும், திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்துவதாகவும், இதனால் உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் பாக்யாஞ்சலி கமிஷனர் அலுவலகத்தில் கூறியிருந்தார்.

கமிஷனர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் லட்சுமி, நடிகை பாக்கியாஞ்சலியிடம் விசாரணை நடத்தினார். புகார் கூறப்பட்டுள்ள வில்லன் நடிகர் வேலு சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. இதனால் அவரை விசாரணைக்காக வேப்பேரி போலீஸ் நிலையத்துக்கு வரும்படி போலீசார் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் வேலு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை. செல்போனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகை பாக்கியாஞ்சலி பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும், அவரது புகாரை சந்திக்க தயார் என்றும், ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார் என்றும் அந்த கடனை திருப்பி கேட்டதால் பொய் புகார் கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

நடிகர் வேலு விசாரணைக்காக துணை போலீஸ் கமிஷனர் லட்சுமியை நேற்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலு வரவில்லை. அவருக்கு பதில் அவரது வக்கீல் லிங்கேஸ்வரன், துணை கமிஷனர் லட்சுமியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகை பாக்கியாஞ்சலி ரூ.40 ஆயிரம் கடன் வாங்கிக்கொண்டு அதை திருப்பி கேட்டால், தன்னை வேலு மிரட்டுகிறார் என்று புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரை கோர்ட்டில் சந்திப்போம்.

நடிகர் வேலு சார்பில் சென்னை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுமீதான விசாரணை முடிந்த பிறகு தான் வேலு போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார். பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி அவதூறு பரப்பிய நடிகை பாக்கியாஞ்சலி மீது கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு ஒன்றும் தொடரப்படும்.

நடிகர் வேலு அவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டுதான் பாக்கியாஞ்சலிக்கு எஸ்.எம்.எஸ். தகவல் அனுப்பினார். ஆனால் பாக்கியாஞ்சலி, நடிகர் வேலுக்கு 120 முறை எஸ்.எம்.எஸ். தகவல்கள் அனுப்பியுள்ளார். அந்த தகவல்கள் அடங்கிய விவரம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

அதில், அவர் என்னென்ன தகவல்கள் சொல்லியுள்ளார் என்பதும் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்படும். அப்போது நடிகர் வேலு திருமணம் செய்ய வற்புறுத்தினாரா? அல்லது நடிகை பாக்கியாஞ்சலி திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தினாரா? என்பது வெளிச்சத்துக்கு வரும்...", என்றார்.

இதற்கிடையே, நடிகர் வேலு விசாரணைக்கு வராமல் தலைமறைவாக உள்ளதால் அவரைக் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X