நட்சத்திர ஹோட்டலில் டிவி நடிகர்-வாலிபர்கள் மோதல்
சென்னை: நட்சத்திர ஹோட்டலில் டிவி நடிகருடன் வாலிபர்கள் மோதலில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்பேடு சின்மயா நகரில் வசித்து வரும் டி.வி. நடிகர் தீபக், தனியார் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
இன்று காலை இவர் தனது மனைவியுடன் தேனாம்பேட்டை ஜி.என். செட்டி ரோட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு 3 வாலிபர்கள் காபி குடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், தீபக்கைப் பார்த்து கிண்டல் செய்ததால், அவருக்கும் வாலிபர்களுக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு, கைகலப்பாக மாறியது.
மோதல் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். இதையடுத்து வாலிபர்கள் தப்பியோட, ஒருவர் மட்டும் சிக்கினார்.
அவர்கள் மீது தீபக் புகார் அளித்துள்ளார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











