சீமானை சிறையில் சந்திக்க ஜி.கே.மணிக்கு தடை

இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று முன்தினம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் நேற்று பாமக தலைவர் ஜி.கே.மணி சந்திப்பதற்காக சிறைக்கு வந்தார். அவருடன் பாமகவினரும் வந்தனர்.
ஆனால் ஜி.கே.மணியை சீமானை சந்திக்க அனுமதி கிடையாது என்று கூறி சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால் கோபமடைந்த பாமகவினர் சிறை வாசலில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை அமைதிப்படுத்தினார் மணி. பின்னர் அனைவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
Comments
agitation அனுமதி மறுப்பு இலங்கை விவகாரம் சிறை சீமான் ஜிகேமணி பாமக புதுச்சேரி போராட்டம் gkmani jail permission denied seeman srilanka issue


Click it and Unblock the Notifications