ஹேமமாலினி வீட்டில் கொள்ளை... இருவர் கைது!

இதில் சந்தேகத்தின்பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை கோரேகானில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ஹேமமாலினியின் வீட்டின் ஜன்னலை உடைத்து நேற்று முன்தினம் ரூ.75 லட்ச ரொக்கமும், 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
இது குறித்து ஹேமமாலினி அளித்த புகாரின் பேரில் கோரேகான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளை தொடர்பாக ஹேமமாலினி வீட்டு காவலாளியையும், வீட்டு வேலைக்காரர் ஒருவரையும் கோரேகான் விசாரணைக்காக நேற்று போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களிடம் கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications