எந்திரன் கதைத் திருட்டு: எழுத்தாளர் வழக்கில் ஷங்கருக்கு நோட்டீஸ்

By Chakra

Shankar
தனது கதையைத் திருடி எந்திரன் படத்தை எடுத்துள்ளதாக எழுத்தாளர் ஆர்னிகா நாஸர் தொடர்ந்த வழக்கில் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இது தொடர்பாக, சிதம்பரத்தை சேர்ந்த எழுத்தாளர் ஆர்னிகா நாசர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

நான் எழுதிய 31 நாவல்களை தொகுத்து மணிமேகலை பிரசுர நிறுவனம் ரோபோட் தொழிற்சாலை என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டது. இதில் உள்ள நாவல் வாரப் பத்திரிகை ஒன்றிலும் வெளியானது. இந்த ரோபோட் தொழிற்சாலை நாவலில் உள்ள கதையை இயக்குநர் ஷங்கர் திருடி எந்திரன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளார். இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது.

இதற்காக எனக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும். எந்திரன் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி இயக்குநர் ஷங்கர் மற்றும் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

எந்திரன் கதை உரிமை கோரி ஏற்கெனவே ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஷங்கருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் போலீசார் அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X