சிபிஐ நீதிமன்றம் வந்த இளையராஜா!

அர்ஜூன், கவுதமி நடிப்பில் 'அக்னி வளையம்' என்ற படத்தை தயாரிப்பதாக கூறி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.4 கோடியே 88 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக சுந்தராம்பாள் என்பவர் மீது சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கான விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இதில் ஏற்கெனவே நடிகை கவுதமி, நடிகர்கள் அர்ஜூன், வினுசக்கரவர்த்தி ஆகியோர் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகி, 'இந்த படத்தில் நடிக்க நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை' என்று சாட்சியம் அளித்தனர்.
நீதிபதி ரெங்கராஜன் முன்பு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஸ்ரீராம் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்தக் கலைஞர்களை தன் படத்துக்காக ஒப்பந்தம் செய்து அட்வான்ஸ் கொடுத்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இவர்களை சாட்சிக்கு அழைத்துள்ளது சிபிஐ.


Click it and Unblock the Notifications











