கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து

இசைத்துறையின் ஆஸ்கர் எனக் கருதப்படும் கிராமி விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் கருணாநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
'இசைத் துறையின் மிக உயர்ந்த விருதை தமிழகத்தின் புதல்வனான நீங்கள் பெற்றிருக்கும் மகத்தான நிகழ்வை நினைத்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.
இசைத்துறையில் சிகரத்தை தொட்டு இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
Comments
கருணாநிதி ஏஆர்ரஹ்மான் வாழ்த்து கிராமிவிருது karunanidhi arrehman grammy awardkarunanidhi greets a.r.rehman


Click it and Unblock the Notifications