எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் மறைவு!

இவர், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார். சினிமா தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
குங்குமம் கதை சொல்கிறது என்ற படத்தில்தான் இவர் முதல்முதலில் நடித்தார். பழம்பெரும் இயக்குநர் கே.சங்கர் இயக்கிய படம் இது.
கரடி, போர்க்களம் ஆகிய படங்களுலும் நடித்துள்ளார்.
தன் சித்தப்பா எம்ஜிஆர் போன்ற தோற்றச் சாயலும், குரல் வளமும் கொண்டிருந்த இவர் படங்களில் நடிப்பதை அமரர் எம்ஜிஆர் ஆகரிக்கவுமில்லை, தடுக்கவுமில்லை.
'என் அண்ணன் மகனாகவே இருந்தாலும், வெறும் சிபாரிசில் பிரகாசிக்க முடியாது. அவரவர் திறமையை வைத்து தங்களுக்கு ஒரு இடத்தைப் பிடிக்கட்டும்' என்று கூறிவிட்டாராம் எம்ஜிஆர்.
ஆனால் சுகுமாரால் ஒரு பெரிய இடத்தை திரையுலகில் பிடிக்க முடியாமல் போய்விட்டது.
1987-ல் ஜானகி முதல்வராக இருந்த போது அரசியலில் நுழைந்தார். ஆனால் அதிலும் ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லை அவரால்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட சுகுமார், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென மரணம் அடைந்தார். இவரது உடல் நாளை மதியம் அடக்கம் செய்யப்படுகிறது.
எம்.ஜி.சுகுமாருக்கு துளசி என்ற மனைவியும், 13 வயதில் மேனகா என்ற மகளும் உள்ளனர். இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடக்கிறது.
சுகுமார் மறைவுக்கு பாஜக பொதுச் செயலாளர் சு.திருநாவுக்கரசர் எம்பி இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











