நிஜத்திலும் நடிக்கும் சிரஞ்சீவி! - ரோஜா தாக்கு

ஹைதராபாத்தில் நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் நன்றாக நடிப்பார். அதேபோல் பொது வாழ்விலும் நடிக்கிறார். சினிமாவில் செல்வாக்கு சரிய தொடங்கியதால்தான் அரசியலுக்கு வந்தார். அவர் பதவி வெறி பிடித்தவர். முதல்வர் பதவியைப் பெற அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அதற்காக மக்கள் முன் நடித்து வருகிறார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட சிரஞ்சீவியுடன் காங்கிரஸ் கூட்டணி சேரத் துடிப்பது இன்னும் கேவலம்.
இன்னொரு பக்கம், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு தற்போது தேர்தலைச் சந்திக்க பயப்படுகிறார். இதனால்தான் அவர் ஆந்திர காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவில்லை.
அவர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆந்திர அரசு கவிழ்ந்து விடும். அதைச் செய்யாமல் அவர் தவிர்ப்பது ஏன்? அவருக்கும் காங்கிரசுக்கும் மறைமுக தொடர்பு இருக்குமோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள்..." என்றார்.


Click it and Unblock the Notifications











