நடிகைகள் குறித்து தொடர் வதந்தி- திரையுலகம் டென்ஷன்

நேற்று நள்ளிரவில் ஷ்ரியா தற்கொலை செய்து கொண்டதாக ஒரு வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வதந்திகள் எல்லாம் நள்ளிரவில்தான் பரவுகின்றன என்பதால் குறிப்பிட்ட சிலர்தான் வேண்டும் என்றே இதுபோல செய்தி பரப்புவதாக நம்பப்படுகிறது.
சமீபத்தில் நடிகை சோனியா அகர்வால் விஷம் குடித்து விட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா அகர்வால், தன் தோழிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தது தெரிய வந்தது.
அதேபோல பிரபல தயாரிப்பாளர் ஜபக் தற்கொலைக்கு முயற்சித்ததாக ஒரு வதந்தி பரவியது. உடனடியாக அவர் அதை மறுத்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் ஷ்ரியா குறித்த வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்படி வதந்தி பரப்புவோரைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என திரையுலகினர் விரும்புகின்றனர்.
More from Filmibeat
actress shreya கோலிவுட் சென்னை தற்கொலை நடிகை ஸ்ரேயா பாலிவுட் வதந்தி bollywood chennai kollywood rumour


Click it and Unblock the Notifications











