ஷைனி சிறைக்காவல் ஜூலை 16 வரை நீட்டிப்பு

வேலைக்காரப் பெண்ணை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் ஷைனி அகுஜா. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில், வேலைக்காரப் பெண்ணுடன் ஷைனி அகுஜா செக்ஸ் உறவு வைத்துக் கொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஷைனியின் சிறைக்காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர் அந்தேரி பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை ஜூலை 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த வாரம் ஜாமீன் கோரி ஷைனி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications