எஸ்பிபி, சுசிலா உட்பட 4 பேருக்கு சிவாஜி விருது

நடிகர்திலகத்தின் 81வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விருதுகளை ஆண்டுதோறும் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அன்று சிவாஜி-பிரபு அறக்கட்டளை தமிழக திரையுலக சேர்ந்த 4 பேருக்கு வழங்கி வருகிறது.
நேற்று நடந்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் பி.வாசு, எஸ்பி முத்துராமன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், ராஜேஷ், தியாகு, சின்னிஜெயந்த் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
சிவாஜி மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார். பிரபு நன்றி கூறினார்.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பின்னணி பாடகர் பிபி சீனிவாஸ், எஸ்பி பாலசுப்ரமணியம், பாடகி பி.சுசிலா மற்றும் சிவாஜின் மேக்கப் மேன் முத்தப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பரிசுகளை ராம்குமார், பிரபு வழங்கினர்.
மறைந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் சிறப்பு தபால் உறையை தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் த.மூர்த்தி வெளியிட்டார். அதை கே.வி.மகாதேவனின் மகன் கண்ணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் சிவாஜி குறித்து அவரது நெருங்கிய தோழரும், சம்பந்தியுமான முத்தமாணிக்கம் எழுதிய 'வேட்டைக்கு வந்த சிங்கம்' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதை தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ராமன் பெற்றுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











