டைட்டில் போயிருச்சாம்!-தியேட்டர் ஓனரை உதைத்த ரஜினி ரசிகர்கள்!

எந்திரன் திரைப்படம் நேற்று வெளியானது. தூத்துக்குடி சினிராஜ், பாலகிருஷ்ணா, கிளியோபட்ரா ஆகிய மூன்று தியேட்டர்களிலும் காலை 7 மணி காட்சி ரசிகர் மன்ற காட்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கிளியோபட்ரா தியேட்டரில் காலை 7 மணி காட்சிக்கு மாவட்ட தலைவர் ஏ.எம்.ஸ்டாலின், செயலாளர் டக்ளஸ் ஆகியோர் தலைமையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர்.
ஆனால், படம் 6.45 மணிக்கே திரையிடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் தியேட்டர் அதிபர் பிரைசரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தியேட்டர் அதிபர் பிரைசரையும் அங்கு இருந்தவர்களையும் அடித்து உதைத்தனர். மேலும் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தென்பாகம் போலீசில் பிரைசர் புகார் அளித்தர். அதன் பேரில் போலீசார் மாவட்ட தலைவர் ஏ.எம்.ஸ்டாலின்,செயலாளர் டக்ளஸ் ஆகிய்யோர் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











