நடிகை வைஷ்ணவி தற்கொலைக்கு காரணமான டிவி நடிகர் தேவ் ஆனந்த் சிறையில் அடைப்பு!

By Shankar

சென்னை: இளம் நடிகை வைஷ்ணவியை காதலித்து, பின்னர் தாக்கி தற்கொலைக்கு தூண்டிய டிவி நடிகர் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சென்னை அண்ணாநகரில் வசித்த இளம் நடிகை வைஷ்ணவி. இவர் தீனா, பாபா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவருக்கும் டி.வி. நடிகர் தேவ் ஆனந்த்துக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. தேவ் ஆனந்த் திருமணமானவர். இருந்தபோதிலும் அவர் வைஸ்ணவியை காதலித்தார்.

தனக்கு 2-வது மனைவியாக இருக்கும்படி அவர் வைஷ்ணவியிடம் தொடர்ந்து வற்புறுத்தினாராம்.

கடந்த 2006-ம் ஆண்டு வைஷ்ணவியை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய தேவ் ஆனந்த் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முகத்தில் காயம் அடைந்த வைஷ்ணவி நடந்த சம்பவங்களை அழுது கொண்டே வீட்டில் வந்து கூறியுள்ளார்.

2 நாட்கள் கழித்து வீட்டில் தனியாக இருந்த வைஷ்ணவி, மன உளைச்சலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். வைஷ்ணவி தற்கொலை (174-ஐ.பி.சி.) செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து, அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

தேவ் ஆனந்தின் தொல்லை தாங்காமல்தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேது மாதவன் தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தீர்ப்பை கேட்டதும் தேவ் ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேவ்ஆனந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X