twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல் செல்வாக்கை வைத்து பலரது குடும்பத்தை அழித்தவர் புவனேஸ்வரி - போலீஸ்

    |

    Bhuvaneswari
    தனக்கு இருந்த அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு தன்னை எதிர்த்தவர்களை ஆள் வைத்து அடிப்பதையும், பலரது குடும்பங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி நாசம் செய்வதையும் தொழிலாகவே கொண்டிருந்தார் நடிகை புவனேஸ்வரி என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது- இந்த செய்தி கோடம்பாக்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, இவ்வளவு லேட்டாக கைது செய்யப்பட்டிருக்கிறாரே என்றுதான் அவர்களில் பெரும்பாலானோரும் நினைக்கிறார்கள்.

    காரணம், இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாகவே புவனேஸ்வரி விபச்சாரத்தை பெரிய அளவில் செய்து கொண்டிருந்ததாக கூறுகிறார்கள். போலீஸ் தரப்பிலும் இதை உறுதி செய்கிறார்கள்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,

    கடந்த பல வருடமாகவே விபச்சாரத்தை மிகப் பெரிய அளவில் செய்து வந்தார் புவனேஸ்வரி. ரெகுலராக தன்னிடம் வருபவர்களிடம் ரூ. 10,000 (ஒரு மணி நேரத்திற்கு) என்று ரேட் வைத்திருந்தார்.

    இதுதவிர பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் என்றால் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கறந்து விடுவார்.

    இதுதவிர தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களை மோசடி செய்வதிலும், அவர்களின் பணம், நகை உள்ளிட்டவற்றை களவாடுவதையும் இவர் வாடிக்கையாக வைத்திருந்தார்.

    இவரிடம் சில பெண்களும் இருந்தனர். அவர்களிடம் உல்லாசமாக இருக்க வேண்டுமானால் ஒரு ரேட், தானே வருவதாக இருந்தால் இன்னொரு ரேட் என்று நிர்ணயித்து வைத்திருந்தார்.

    சில சமயங்களில், தானே வருவதாக கூறி வாடிக்கையாளர்களிடம் பெரும் பணம் பறிப்பார். ஆனால் தான் போகாமல், தன்னிடம் உள்ள பெண்களை அனுப்பி வைத்து அந்த வாடிக்கையாளர்களை ஏமாற்றி விடுவாராம்.

    இதுகுறித்து எந்த வாடிக்கையாளராவது தட்டிக் கேட்டால் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மிரட்டுவது, முடிந்தால் ஆள் வைத்து அடிப்பது அல்லது அவர்களது குடும்பத்தினரிடம் இந்த விஷயத்தைக் கூறி சீரழிப்பது என்று இறங்கி விடுவாராம்.

    புவனேஸ்வரியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல உள்ளன. கடந்த 2002ம் ஆண்டே புவனேஸ்வரியை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அப்போது தனக்கிருந்த அரசியல் செல்வாக்கை வைத்து வெளியே வந்து விட்டார் புவனேஸ்வரி.

    புவனேஸ்வரிக்கு சினிமா ஸ்டண்ட் ஆட்கள் பலருடன் நல்ல தொடர்பு உள்ளது. தன்னை யாராவது மிரட்டினாலோ அல்லது போலீஸுக்குப் போவதாக கூறினாலோ, இந்த ஸ்டண்ட் பார்ட்டிகளை வைத்து சம்பந்தப்பட்டர்களை நையப்புடைத்து விடுவாராம்.

    2002ம் ஆண்டு புவனேஸ்வரியைக் கைது செய்த போலீஸாரைக் கூட இப்படி ஆட்களை வைத்து மிரட்டினாராம் புவனேஸ்வரி.

    கடந்த 2002ம் ஆண்டு இதேபோல நடிகைகள் வினிதா, மாதுரி ஆகியோரும் கூட விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களும் கூட தங்களது அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி வழக்கை உடைத்து வெளியே வந்து விட்டனர்.

    புவனேஸ்வரியால் இப்போது தனது அரசியல் செல்வாக்கை காட்டி தப்பி வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால்தான் அவர் சிக்கி கைதாகி உள்ளே போயுள்ளார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X