twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா' - எம்ஜிஆர் - ரஜினி படங்கள் இருட்டடிப்பு!

    By Shankar
    |

    The Best of Tamil Cinema
    தி பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா... - மோசர் பேர் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளராக பணியாற்றி, இப்போது யுடிவி நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஜி தனஞ்செயன் எழுதிய ஆங்கிலப் புத்தகம் இது.

    இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள மிக மிக காஸ்ட்லி புத்தகம் இது (விலை ரூ 2999!).

    இந்தப் புத்தகத்தில் 1931-ம் ஆண்டு தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து 2010-ம் ஆண்டு வரையிலான 80 ஆண்டு கால படங்களில், தனது விருப்பத்துக்கேற்ப மிகச் சிறந்த படங்கள் என சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார் தனஞ்செயன்.

    1931 முதல் 1976 வரையிலான காலகட்டத்தில் வெளியான படங்களில் சிறந்தவற்றின் தொகுப்பு முதல் தொகுதியாகவும், 1977 முதல் 2010 வரை வெளியான படங்களில் சிறந்தவை இரண்டாம் தொகுதியாகவும் தொகுக்கப்பட்டுள்ளன.

    இரண்டு ஆண்டுகள் தயாரான இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று சென்னை கிரீன்பார்க் ஹோட்டலில் நடந்தது.

    இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன், பாக்யராஜ், சிங்கீதம் சீனிவாசராவ், பார்த்திபன், செல்வராகவன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், நடிகர் கமல்ஹாஸன் புத்தகத்தை வெளியிட்டார்.

    முன்னதாக இந்தப் புத்தகத்தில் சிறந்த படங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளவற்றின் வீடியோ காட்சிகளை திரையிட்டுக் காட்டினார்கள்.

    இவற்றில் 1950களுக்குப் பிந்தைய படங்களில் சிறந்தவை என காட்டப்பட்டவை பெரும்பாலும் சிவாஜி மற்றும் கமல் படங்களாகவே இருந்தன.

    "1950 மற்றும் 60 களில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான புதிய முயற்சிகள் அமரர் எம்ஜிஆரின் படங்களிலிருந்தே துவங்கியிருந்தன. ஆனால்1960 முதல் 69 வரையிலான காலகட்டத்தில் சிறந்த படங்கள் என தனஞ்செயன் குறிப்பிட்டுள்ளவற்றில், எம்ஜிஆரின் சிறந்த படங்களாக 5 மட்டுமே இடம்பெற்றுள்ளது புத்தகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியதாக்கியுள்ளது", என்றார் விழாவுக்கு வந்திருந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

    ஆனால் சிவாஜி நடித்தவற்றில் இரும்புத்திரை போன்ற தோல்விப் படங்களும் கூட இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தமிழ் சினிமாவின் வர்த்தக எல்லையை விரிவுபடுத்திய ரஜினியின் படங்களான பில்லா, சிறந்த கதை-நடிப்பு என பாராட்டப்பட்ட ஆறிலிருந்து 60 வரை, எங்கேயோ கேட்ட குரல், பொல்லாதவன், அண்ணாமலை போன்ற படங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கமல்ஹாஸன், இந்த புத்தகம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று பாராட்டினார். "இங்கு காண்பிக்கப்பட்ட ஆடியோ விஷுவலின் இரண்டாம் பகுதியை நான் வெகுவாக ரசித்தேன். காரணம் அதில் என் படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தன. இன்னும் கூட ஓடாதா என்று ஏக்கமாகவே இருந்தது. இதன் மூன்றாகம் பாகம் வெளியிடும்போதும் நான் வருவேன்," என்றார்.

    English summary
    Kamal Hassan released the book 'The Best of Tamil Cinema' written by G Danajayan yesterday at Green Park. In this book, the author has compiled some best films in the 80 year span of Tamil cinema, but failed in balanced selection of films. Mostly Sivaji Ganesan and Kamal Hassan films only highlighted in the book, as critics told.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X