ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூர், ஜாவேத் அக்தர் பெயர்கள் ராஜ்யசபாவுக்கு பரிந்துரை

இவர்கள் தவிர பத்திரிக்கையாளர் பிரிவில் அவீக் சர்க்கார், வீர் சங்வி, சேகர் குப்தாவின் பெயர் பரிசீலனையில் இருந்து வருகிறதாம். பத்திரிக்கையாளர் பிரிவில் ஒரு எம்.பி.தான் நியமிக்கப்பட முடியும். அனேகமாக அவீக் சர்க்காருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
ராஜ்யசபாவில் நியமன உறுப்பினர்களாக இருந்த 7 பேரின் பதவிக்கால்ம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. பீமல் ஜலான், தாரா சிங், ஹேமமாலினி, சந்தன் மிஸ்ரா, கஸ்தூரி ரங்கன், நாராயன் சிங் மனகலோ, ராம்ஜேட்மலானி ஆகியோரே ஓய்வு பெறும் எம்.பிக்கள் ஆவர். இவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களை குடியரசுத் தலைவர் நியமன உறுப்பினர்களா நியமிப்பது வழக்கத்தில் இருந்து வருகிறது.
ஓய்வு பெறும் ஏழு பேரில் ஹேமமாலினி, சந்தன் மித்ரா, ராம்ஜேட்மலானி ஆகியோர் அரசியல் பின்னணியைக் கொண்டவர்கள். மற்ற நால்வரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள்.
அதேபோல தற்போது மத்திய அரசின் சார்பில் ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூர், ஜாவேத் அக்தர் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைக்கப்படவுள்ளன. கலைப் பிரிவில், பத்திரிக்கையாளர்கள் அவீக் சர்க்கார், சேகர் குப்தா, வீர் சிங்வி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications











