twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவில் சினிமா தியேட்டர்கள் ஸ்டிரைக்

    By Sudha
    |

    மலையாளத் திரையுலகைக் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தாமதம் செய்து வருவதைக் கண்டித்து நேற்று கேரளாவில் தியேட்டர் உரி்மையாளர்கள் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் செய்தனர்.

    இந்த ஸ்டிரைக் காரணமாக 49 ஊர்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 210 தியேட்டர்கள் மூடிக் கிடந்தன.

    இந்த ஸ்டிரைக் முழுமையாக நடந்ததாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.சி.பாபி கூறினார்.

    மலையாளத் திரையுலகைக் காக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளர் டி.பாலகிருஷ்ணன் அரசுக்குப் பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். அதை அமல்படுத்தாமல் அரசு தாமதம் செய்து வருகிறது. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    மேலும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையிடப்படும்போது வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் அரசு ஆகிய நால்வருக்குமே நல்ல லாபம் கிடைக்கும் என்றார் பாபி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X