பவன் கல்யாணுக்கு பிடிவாரண்ட்!

சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பவன் கல்யாண். சிரஞ்சீவிக்கு ஆதரவாக பல பொதுக் கூட்டங்களில் பேசினார்.
கடந்த 2008-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள வனப்பத்தி பகுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் பற்றி இழிவாக பேசியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரசாரை கிரிமினல்கள் என்றும் கூறினாராம்.
இதையடுத்து பவன் கல்யாண் மீது வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவர் வனப்பத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் பவன் ஆஜராக வில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிரவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜெயபிரசாத் உத்தர விட்டார்.
Comments
சிரஞ்சீவி தேர்தல் பிரச்சாரம் பவன் கல்யாண் பிடி வாரண்ட் election campaign non bailable warrant pawan kalyan


Click it and Unblock the Notifications