மதுரையில் இனிது இனிது பட இசை வெளியீடு: வெளியிட்டார் பிரகாஷ் ராஜ்

By Sudha

Inidhu Inidhu Movie Audio Release
எந்திரன் பட ஆடியோவை மலேசியாவில் வெளியிட்டதை குறை கூறிய நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இனிது இனிது படத்தின் ஆடியோ வெளியீட்டை படு வித்தியாசமாக ஊர் ஊராக சென்று வெளியிட்டு வருகிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான டூயட் மூவிஸ் புதுமுக நடிகர்களை வைத்து, இனிது இனிது என்ற படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படம் ஹேப்பி டேஸ்' என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதன் இயக்குநர் குகன். இந்த படம் நண்பர்களை பற்றிய படம்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா முதலில் சென்னையில் நடந்தது. தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவையிலும் வெளியிடப் போவதாக கூறியிருந்தார் பிரகாஷ் ராஜ்.

இன்று மதுரையில் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் பிரகாஷ் ராஜும், படத்தின் நடிகர்-நடிகைகளும் கலந்து கொண்டனர். இசைத் தட்டை பிரகாஷ் ராஜ் வெளியிட்டார்.

அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இந்த படம், இளமை மற்றும் கல்லூரி பருவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். எனவே, 2 ஆயிரம் புதுமுகங்கள் வரவழைக்கப்பட்டு நடிகர்- நடிகைகளை தேர்ந்தெடுத்தோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 3 மாதம் நடிப்பு பயிற்சி அழித்தோம். அதன் பிறகே அவர்களை படத்தில் நடிக்க வைத்தோம்.

இந்த படத்தில் புதுமுகங்கள் சிறப்பான முறையில் நடித்துள்ளனர். இது இளைஞர்கள், கல்லூரி மாணவிகளை கவரும்.

இனிமேல் நான் தயாரிக்கும் படங்களை நானே வெளியிடப் போகிறேன். நான் தரமான படங்களை மட்டுமே தயாரிப்பேன். சினிமாவுக்கும், அரசியலுக்கும் பெயர் போன ஊர் மதுரை. எனவே நான் மதுரைக்கு வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

அவரிடம் செய்தியாளர்கள் போனி வர்மா என்று இழுத்தபோது, இசை வெளியீட்டிற்காக வந்துள்ளேன், வேறு எதையும் பற்றி பேச விரும்பவில்லை என்று கூறி விட்டார் பிரகாஷ் ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X