பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு கோர்ட்டில் ஆஜர்

கிரகலட்சுமி தனக்கு முன்பாகவே வேணு பிரசாத்தைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டார். எனவே தனது கல்யாணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதே கோர்ட்டில், கிரகலட்சுமியிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி வேணு பிரசாத் நாராயணனும் மனு செய்துள்ளார்.
இரு வழக்குகளும் இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு பிரசாத் ஆகியோர் ஆஜரானார்கள்.
ஒரே நேரத்தில் ஒரே கோர்ட்டில் மூன்று பேரும் ஆஜரானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி இரு வழக்குகளையும் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
Comments


Click it and Unblock the Notifications