சாட்சிகள் வராததால் குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு

சென்னையில் கடந்த ஆண்டு வல்லமை தாராயோ என்ற திரைப்பட விழாவில் நடிகை குஷ்பு சாமி சிலை அருகே கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார் என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது. இது குறித்து பத்திரிக்கைகளிலும் குஷ்பு குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் மற்றும் செய்தி வெளியானது.
இதனையடுத்து இந்து மத கடவுகள்களை நடிகை குஷ்பு அவமரியாதை செய்து விட்டார் என்று கூறி அத்வானி பேரவை மாவட்ட துணைத் தலைவர் நேஷனல் கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சாட்சிகள் விசாரணை நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சாட்சிகள் வரவில்லை. இதனால் இந்த வழக்கை வரும் மே 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Comments
actress kushboo adjourn இந்து கடவுள்கள் ஒத்திவைப்பு நடிகை குஷ்பு நீதிமன்றம் புதுக்கோட்டை வழக்கு hindu gods pudhukottai


Click it and Unblock the Notifications