காங்கிரசுக்கு சல்மான் கான் பிரச்சாரம்

இந்த தொகுதியில் முலாயம்சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
ராஜ் பப்பர் ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமான எம்பியாக இருந்தவர். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். அதற்கு உடனடிப் பலனாகத்தான் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜ்பப்பரை ஆதரித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பேசினார். அவரது பிரசாரத்தில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்றார்கள்.
ராஜ்பப்பரை ஆதரித்து நடிகர் சல்மான்கான் நேற்று வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் ராஜ்பப்பரின் மகளும், நடிகையுமான ஜுஹிபப்பர், காங்கிரஸ் தலைவர் நசீப்பதான் ஆகியோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்கள் சல்மான்கானைப்பார்த்ததும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பைரோசாபாத் நகரில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார் சல்மான்கான்.
இதற்கிடையே டிம்பிள் யாதவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தியதை சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் அமர்சிங் குறை கூறியுள்ளார்.
'அமெதி, ரேபரேலி தொகுதியில் ராகுல் மற்றும் சோனியாவை எதிர்த்து சமாஜ் வாடி கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இதே போல காங்கிரசும் இந்த முறை விட்டுக் கொடுத்திருக்கலாம்' என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











