இயக்குநர் சீமானுக்கு நிபந்தனை ஜாமீன்!

தமிழ் பெண்கள் குறித்து நடிகர் ஜெயராம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு தாக்கப்பட்டது.
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் இதில் ஈடுபட்டதாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சீமானும் ஒருவர். எனவே சீமான் ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் பூந்தமல்லி 1வது கோர்ட்டில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் இயக்குநர் சீமான் சரணடைந்தார்.
அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications