பிஆர்ஓ சங்க தலைவராக மீண்டும் விஜயமுரளி தேர்வு!

அவரது தலைமையில் கடந்த முறை பொறுப்பிலிருந்தவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய நிர்வாகம் அடுத்த இரு ஆண்டுகளுக்குப் பதவியிலிருக்கும்.
பொதுச் செயலாளராக பெரு துளசி பழனிவேலும், பொருளாளராக ஆதம்பாக்கம் ராமதாஸும் பொறுப்பேற்றுள்ளனர்.
விபி மணி, மதுரை செல்வம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், ஜி பாலன், கோவிந்தராஜ் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
ஜேவி, டிஎம் ராமன், நெல்லை அழகேஷ், கிளாமர் சத்யா, மதிஒளி குமார், கணேஷ்குமார், ராமானுஜம், மேஜர்தாஸன் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை போர்பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த இந்த கூட்டத்தை மூத்த பத்திரிகைத் தொடர்பாளரும் பிஆர்ஓ யூனியன் முன்னாள் தலைவருமான டைமண்ட் பாபு, கண்ணதாசன் மற்றும் சிங்காரவேலு ஆகியோர் முன்நின்று நடத்திக் கொடுத்தனர்.
யூனியனுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் புதிய நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications











