தலைவாசல் விஜய் வீட்டில் 55 சவரன் நகை, பணம் கொள்ளை!

தலைவாசல் படத்தில் நடிக்கத் துவங்கி, தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் விஜய்.
இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்து சிலர் கொள்ளையடித்துள்ளனர்.
இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் நகை மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 55 நசவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகர போலீசில் தலைவாசல் விஜய் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications