twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஞ்சா கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ள புவனேஸ்வரி!

    |

    Bhuvaneswari
    புழல் சிறையில அடைக்கப்பட்டுள்ள புவனேஸ்வரி கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வழக்கில் கைதான பெண்களுடன் படுத்துத் தூங்கினார். அவர்களிடம் எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேனே, என்று அழுது புலம்பினாராம் புவனேஸ்வரி.

    சிறைவாசம் புவனேஸ்வரிக்கு புதிதல்ல. ஏற்கெனவே 2002-ல் கைதாகி ரிமாண்டில் இருந்தவர்தான். ஆனால் அப்போது அவரை சைதாப்பேட்டை கிளைச்சிறையில் வைத்திருந்தனர். அதில் அடிப்படை வசதிகள் கூட கிடையாது.

    இந்த முறை அனைத்து நவீன வசதிகளும் நிறைந்த புழல் சிறையில் வைத்துள்ளனர். சிறையில் தனக்கு முதல் வகுப்பு சிறை கேட்டாராம் புவனேஸ்வரி.

    அதெல்லாம் உங்களுக்குத் தர முடியாது என்று கூறி, விபச்சார வழக்கில் கைதான புவனேஸ்வரிக்கு
    சாதாரண விசாரைக் கைதிகளுக்கான அறையில் போட்டு விட்டனர்.

    இதனால் மின் விசிறி, கட்டில் வசதி போன்றவை இல்லை. மேலும், அவரோடு கஞ்சா மற்றும் கள்ளச்சாராய வழக்கில் கைதான 7 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இரவு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டபோது, மற்ற பெண் கைதிகளுக்கு இவரை அடையாளம் தெரியவில்லையாம் (மேக்கப் எல்லாம் சினிமாவில் மட்டும்தானே). காலையில் ஜெயிலில் வழங்கப்படும் பத்திரிகையை பார்த்தபோது தான் அட, இது நடிகை புவனேஸ்வரி என்று அடையாளம் தெரிந்து கொண்டனர்.

    தனது 'ஜெயில் மேட்டு'களிடம், "நான் ஏன் இந்த உலகத்தில் பிறந்தேன், ஏன் இப்படி வாழ்கிறேன்" என்று புவனேஸ்வரி அழுதபடி கூறினாராம். அழக்கூடாது என்று மற்ற கைதிகள் அவருக்கு ஆறுதல் கூறினார்களாம்.

    இது செல்லாது...!

    வீட்டில் ஏர்கண்டிசன் அறையில் சொகுசு கட்டிலில் படுத்து தூங்கிய புவனேஸ்வரி மற்ற கைதிகளோடு தரையில் படுத்து தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாராம்.

    போலீசார் தன்னை நயவஞ்சகமாக ஏமாற்றி கைது செய்துள்ளார்கள் என்றும், போலீசார் பயன்படுத்திய டெக்னிக்கைப் பயன்படுத்தினால் சென்னையில் ஒரு பெண் கூட யோக்கியமானவளாக இருக்கமுடியாது என்றும் பகீரனெக் கூறி புலம்பியுள்ளார்.

    மகனுக்காகத்தான்...

    மற்ற கைதிகளோடு உட்கார்ந்து ஜெயில் சாப்பாட்டை சாப்பிட்டார். "எனக்கு யாரும் விரோதிகள் இல்லை. ஏன் என்னை இப்படி மாட்டிவிட்டார்கள் என்பது தெரியவில்லை என்று அழுதபடியே புவனேஸ்வரி உள்ளார். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்காகவே நான் வாழ்கிறேன்" என்றும் அவர் கூறினாராம்.

    "போலீசார் மாறுவேடத்தில் கோவையில் நடன நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று அழைத்தார்கள். அதற்காகத்தான் பணம் கொடுத்தார்கள். நடன நிகழ்ச்சி என்பதால் ஒத்துக்கொண்டு பணம் வாங்கினேன். உடனே என்னை விபசார வழக்கில் கைது செய்துவிட்டனர். போலீசார் என்னை ஏமாற்றி வலையில் சிக்க வைத்துவிட்டனர்" என்று புவனேஸ்வரி அழுது கொண்டே சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

    'என்னை கைது செய்தீர்களே, என்னை ஏமாற்றிப் பணம் கொடுத்த என்னுடைய 'கஸ்டமரான' போலீஸ்காரர்களையும் கைது செய்வதுதான்... அவர்கள்தானே என்னை தவறு செய்யத் தூண்டினார்கள்' என லா பாயிண்டெல்லாம் பேசிய புவனேஸ்வரி, விரைவில் வெளியில் வந்து தான் யார் எனக் காட்டுவேன் என்று சவால் விட்டாராம்.

    நேற்று புவனேஸ்வரியை அவரது வக்கீல் மட்டும் பார்த்து பேசினார். நாளை திங்கள்கிழமை புவனேஸ்வரியை ஜாமீனில் வெளியில் கொண்டுவர உரிய ஏற்பாடு செய்வதாக வக்கீல் கூறிவிட்டு வந்துள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X