பாலா வீட்டு முன் தண்டோரா போட நீதிபதி உத்தரவு!

By Staff

Arya with Pooja
சென்னை: 'நான் கடவுள்' படத்தின் இயக்குனர் பாலா வீட்டு முன்பு தண்டோரா அடிக்குமாறு, சென்னை சிட்டி சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ஆர்யா - பூஜா நடிக்க பாலா இயக்கத்தில் உருவான படம் 'நான் கடவுள்'. இந்தப் படத்தை வாசன் விஷுவல்ஸ் மீடியா சார்பில் சீனிவாசன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஊனமுற்றோரை பிச்சைக்காரர்களாக சித்தரித்தது தவறு என்றும், இதனால் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாரியத்தின் உறுப்பினரும், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்க துணை பொதுச்செயலாளருமான கே.கோபிநாத் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் வழக்கு நேற்று 5-வது சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

பதில்மனு தாக்கல் செய்ய பாலா மற்றும் தயாரிப்பாளரின் வழக்கறிஞர் அவகாசம் கேட்டார். இதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 7-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதை அறிவிக்க இயக்குனர், தயாரிப்பாளர் வீடு மற்றும் அலுவலகம் முன்பாக தண்டோரா அடித்து அறிவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பத்திரிகைகளிலும் இது தொடர்பாக விளம்பரம் செய்யவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X