நடிகர் ராமராஜன் தந்தை மரணம்- ஜெ. இரங்கல்
சென்னை: நடிகர் ராமராஜனின் தந்தை ராமய்யா மரணமடைந்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்,
அ.தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளரும், முன்னாள் எம்.பி.யுமான நடிகர் ஆர்.ராமராஜனின் தந்தை ராமய்யா மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் ராமராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
More from Filmibeat
அரசியல் இரங்கல் ஜெயலலிதா தந்தை தமிழ்நாடு மரணம் ராமராஜன் condolence father jayalalitha ramarajan tamilnadu


Click it and Unblock the Notifications











