சென்னை சிவாஜி சிலை தடுப்புச் சுவர் மீது லாரி மோதல்

சென்னை மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று அந்த சாலையின் வழியாக துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
திடீரென அந்த லாரி தறிகெட்டு ஓடி சிவாஜி சிலையை சுற்றி போடப்பட்டுள்ள தடுப்பு கம்பி வேலி மீது மோதி நின்றது. தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
இது தொடர்பாக வந்தவாசியைச் சேர்ந்த லாரி டிரைவர் விஜயராஜ் (23) கைது செய்யப்பட்டார்.
Comments


Click it and Unblock the Notifications