தப்சி டிமிக்கி... மோகன்பாபு 'கடுகடு'!
ஆடுகளம் நாயகி தப்சி மீது பயங்கர கடுப்பிலிருக்கிறார் தெலுங்கு நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன்பாபு.
தமிழுக்கு வரும் முன்பே தெலுங்கில் பிஸியாக அறிமுகமானவர் தப்சி. அப்போதே, ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் கால்ஷீட்டில் சொதப்பல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடுகளத்தில் நடித்த பிறகு, கால்ஷீட் விஷயத்தில் தாறுமாறாக உள்ளதாம் தப்சியின் போக்கு.
ஒரு படத்துக்கு கொடுத்துள்ள தேதிகளை வேறு படங்களுக்கு மாற்றி கொடுத்து தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றுகிறாரம். தெலுங்கு முன்னணி நடிகர் மோகன்பாபு மகனுக்கு ஜோடியாக நடிக்க கடந்த ஜனவரி மாதம் தேதி ஒதுக்கியுள்ளார் தப்சி.
ஆனால் படப்பிடிப்புக்கு அழைத்த போது வரவில்லை. அந்த தேதிகளை ஒரு இந்திப் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம்.
ஆந்திராவில் மோகன்பாபுவின் அதிரடி ரொம்பவே பிரபலம். முதலில் முறையாக புகார் கொடுத்துவிட்டு, அடுத்து சம்பந்தப்பட்ட நடிகை ஹைதராபாதில் கால் வைக்க முடியாத அளவுக்கு எந்த எல்லைக்கும் போகத் தயங்காதவர் மோகன்பாபு.
இப்போது முதல் கட்டமாக தெலுங்கு நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் தப்சி மீது புகார் கொடுத்துள்ளார் மோகன்பாபு. அடுத்து..?!


Click it and Unblock the Notifications











