மகனைக் கடத்தியதாக கணவர் மீது பாடகர் திப்பு தங்கை புகார்

Tippu
சென்னை: பின்னணி பாடகர் திப்புவின் தங்கை தனது மகனைக் கணவர் கடத்தி விட்டதாக போலீஸில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மனைவியுடன் சேர்ந்து வாழும் நோக்கிலேயே இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து போலீஸார் கணவன், மனைவியை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமாக இருப்பவர் பின்னணி பாடகர் திப்பு. இவரது மனைவி பிரபல பாடகி ஹரிணி. காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது வீடு ஆழ்வார் திருநகர், திலகர் தெருவில் இருக்கிறது.

இவர்களோடு கணவரை பிரிந்து வாழும் திப்புவின் தங்கை காயத்ரி தனது 7 வயது மகன் அருனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தை அருணை தனது கணவர் கடத்தி சென்றுவிட்டதாக காயத்ரி வளசரவாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். அதோடு நிற்காமல் தென் சென்னை இணை கமிஷ்னர் சக்திவேலையும் பார்த்து புகார் கொடுத்தார். அவருடன் பாடகர் திப்புவும் வந்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வடபழனி உதவி கமிஷ்னர் மனோகரன், காயத்ரியின் கணவர் ரஞ்சித்திடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் தனது குழந்தையை தான் அழைத்து சென்றதாக தெரிவித்தார். மேலும், மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸ் தரப்பில் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதில் இருவரும் உடன்படவே குழந்தையுடன், கணவனும், மனைவியும் சந்தோஷமாக கிளம்பிச் சென்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X