பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி கோர்ட்டில் ரமலத் மனு

நயனதாராவை விட்டு விலகும்படி பல வழிகளிலும் முயற்சித்துப் பார்த்தார் ரமலத். பிரபுதேவா குடும்பத்தினரை அணுகினார், பலன் இல்லை. திரையுலக முக்கியஸதர்களை அணுகினார், அதற்கும் பலன் இல்லை. பிரபுதேவாவை தனது கட்டுக்குள் கொண்டு வர அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
இந்த நிலையில் தான் நயனதாராவை கல்யாணம் செய்யப் போவதாக அறிவித்தார் பிரபுதேவா. இது ரமலத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், பிரபுதேவா வீட்டுக்கே வராமல் ஹைதராபாத்திலேயே நயனதாராவுடன் தங்கியிருந்ததும் அவரை பெரும் வேதனைக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இன்று அதிரடியாக களத்தில் குதித்தார் ரமலத். சென்னை குடும்ப நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், என் கணவர் பிரபுதேவா, குடும்பச்செலவுக்கே பணம் தருவதில்லை. என்னையும், என் குடும்பத்தினரையும் என் கணவர் சந்திக்க முடியாமல் நயன் தாரா தடுத்து வருகிறார். என் கணவரை என்னிடம் சேர்த்து வையுங்கள் என்று கோரியுள்ளார் ரமலத்.


Click it and Unblock the Notifications











