வனிதாவைப் பெத்ததுக்காக வெக்கப்படறேன்!-மஞ்சுளா கண்ணீர்

By Chakra

Vijayakumar and Manjula
வனிதாவை மகளாகப் பெற்றதற்காக வெட்கப்படறேன்...அவளை என் மகள் என்று இனி சொல்ல மாட்டேன், என்றார் நடிகை மஞ்சுளா கண்ணீருடன்.

நடிகர் விஜயகுமாருக்கும், அவருடைய மகள் வனிதா விஜயகுமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

மகள் வனிதா மற்றும் மருமகன் ஆனந்தராஜை கைது செய்யுமாறு விஜயகுமாரும், அப்பா விஜயகுமார், அம்மா மஞ்சுளா மற்றும் அண்ணன் அருண் விஜய்யைக் கைது செய்யக் கோரி வனிதாவும் புகார்கள் கொடுத்துள்ளனர். இதில் விஜயகுமார் புகாரின் அடிப்படையில் வனிதா கணவர் ஆனந்தராஜ் கைது செய்து, ஜாமீனில் விடப்பட்டார்.

ஆனால் வனிதா கொடுத்த புகாரில் இன்னும் யாரையும் காது செய்யவில்லை போலீஸ். எனவே அவர்களைக் கைது செய்ய வனிதா வற்புறுத்தி வருகிறார். விஜயகுமாரும் மஞ்சுளாவும் ஹைதராபாதில் தலைமறைவாக உள்ளதாகும், அருண்விஜய் அமெரிக்காவுக்கு தப்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரும் அவர் மனைவியும் நடிகையுமான மஞ்சுளாவும் நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது மஞ்சுளா தன் மகளின் செயலை நினைத்து வேதனையுடன் கண்ணீர் வடித்தார்.

அவர் கூறுகையில், "வனிதாவை என் வயிற்றில் சுமந்து பெத்ததுக்காக வெட்கப்படுகிறேன். அவள் முதலில் நடிகர் ஆகாஷை காதலிப்பதாகச் சொன்னாள். அவரையே திருமணம் செய்வேன் என்றாள். அவள் விருப்பப்படியே திருமணம் செய்து வைத்தோம்.

2 குழந்தைகள் பெற்ற பிறகு ஆகாஷுடன் தகராறு செய்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தாள். அவருடன் வாழமாட்டேன் என்றாள். நாங்கள் அவளை சமாதானப்படுத்தினோம். குடும்பம் என்றால் தகராறு வரத்தான் செய்யும். நாம்தான் அனுசரித்துப்போக வேண்டும் என்று அறிவுரை கூறினோம்.

ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அவள் விவாகரத்துக்கு மனு செய்து இருக்கிறாள். ஒரு வருடம் கழித்து, ஆன் லைன் மூலம் ஆனந்தராஜை காதலித்து, திருமணமும் செய்துகொண்டாள்.

என் கணவருக்கு 2 மனைவிகள் இருக்கிறோம். இரண்டு பேர் மூலமும் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகள் அத்தனை பேரிடமும் ஒரே மாதிரிதான் அன்பு செலுத்தி வருகிறோம். மூத்த மனைவி பிள்ளைகள், இளைய மனைவி பிள்ளைகள் என்ற பேதம் எங்களுக்குள் இல்லை.

வனிதா ஒருத்திதான் இப்படி ஆகிவிட்டாள். அவளை என் பொண்ணுன்னு சொல்றதுக்கே வெட்கப்படுகிறேன்...,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X