எங்கே நடிகை ரஞ்சிதா?

By Staff

Ranjitha and Arjun
கடந்த 3 தினங்களாக 'எங்கே நடிகை ரஞ்சிதா?' என்ற கேள்வி கோடம்பாக்கத்தையும் நித்யானந்தரை அறிந்தவர்கள் மத்தியிலும் சுற்றிச் சுழன்றடிக்கிறது.

நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தரும் சல்லாபிக்கும் காட்சிகள் முழுவதுமாக வெளிவந்து ஆன்மிக உலகையே புரட்டிப் போட்டுவிட்டது.

இந் நிலையில் பல லட்சம் பக்தர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அந்த சாமியாரையும் காணவில்லை, அவரை மேலே விழுந்து புரண்டு சபலத்தில் தள்ளிய ரஞ்சிதாவையும் காணவில்லை.

ரஞ்சிதாவுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன. சாலிகிராமம் வீட்டில்தான் இவர் முதலில் குடியிருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட கையோடு அந்த வீட்டை பூட்டிவிட்டு திநகரில் இன்னொரு பெரிய வீட்டுக்குக் குடியேறிவிட்டார். ஆனால் அவர் கணவர் ரஞ்சிதாவைப் பிரிந்து ராஜஸ்தானுக்குப் போய்விட்டார்.

சாலிகிராமம் வீட்டின் மேல் பகுதியை ஒரு இயக்குநருக்கும் கீழ் பகுதியை ஒரு தயாரிப்பாளருக்கும் வாடகைக்கு விட்டுவிட்டாராம்.

இந்த வீட்டைப் பிடிப்பதில் பெரும் போட்டியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்போது ரஞ்சிதா விவகாரம் வீதிக்கு வந்துவிட, அவரைத் தேடி வீட்டுக்குப் போனால் பெரிய பூட்டு தொங்குகிறது. செல்பேசி மற்றும் வீட்டு எண் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

சாமியாருடன் ஓட்டமா?

நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X