குதிரையிலிருந்து விழுந்து இந்தி நடிகர் மணீஷ் ஆச்சார்யா மரணம்
இந்தி நடிகரும், இயக்குவருமான மணீஷ் ஆச்சார்யா குதிரையிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
40 வயதான மணீஷ் ஆச்சார்யா நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வந்தார். டிசம்பர் 2ம் தேதி தனது குடும்பத்துடன் மாத்தெரன் பகுதிக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்.
அங்கு குதிரை சவாரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
லாயின்ஸ் ஆப் பஞ்சாப் பிரசன்ட்ஸ் என்ற படத்தை இயக்கி பெயர் பெற்றவர் மணீஷ். இதில் ஷபானா ஆஸ்மி நடித்திருந்தார். அப்படத்தில் மணீஷும் நடித்திருந்தார். அதேபோல ஹ்ருத்திக் ரோஷனுடன் லக் பை சான்ஸ் படத்திலும் இணைந்திருந்தார்.
மணீஷ் ஆச்சார்யா மரணத்திற்கு ஹ்ருத்திக் ரோஷன் இரங்கல் தெரிவித்துள்ள். மணீஷின் இறுதிச் சடங்குகள் மும்பையில் நடந்தன.


Click it and Unblock the Notifications











