மேட்டூர் கோர்ட்டில் ஆஜராக நடிகை குஷ்புவுக்கு உத்தரவு!

தமிழக பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு இழிவாக பேசியதாக அவர் மீது மேட்டூரை சேர்ந்த வக்கீல் முருகன் கடந்த 2005 நவம்பர் மாதம் மேட்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் (எண்-2) வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகை குஷ்பு நேரில் ஆஜராகி திரும்பும்போது அவர் மீது அழுகிய தக்காளி, முட்டை, செருப்பு போன்றவை வீசப்பட்டன.
இதுகுறித்து மேட்டூர் தாசில்தார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பா.ம.க. பிரமுகர் அறிவழகன் உள்பட 40 பேர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது குஷ்புவை நேரில் அழைத்து விசாரிக்கவேண்டும் என்று அரசு வக்கீல் கார்த்திகேயன் கூறினார்
கடந்த மாதம் (ஜுலை) 7-ந் தேதி இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் ஆகஸ்டு 4-ந் தேதிக்குள் (நேற்று) நடிகை குஷ்பு கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆனால் நடிகை குஷ்பு நேற்று ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த மாதம் 25-ந் தேதிக்குள் நடிகை குஷ்பு, கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











