பால்கே விருது பெற்ற இசைமேதை பூபேன் ஹஸாரிகா மரணம்

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாக பூபேன் ஹஸாரிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் ஹஸாரிகா. பலதுறை வல்லுநராகப் பரிமளித்த இவர், காந்தி டூ ஹிட்லர் என்ற படத்தில் பாடல் எழுதி இசை அமைத்து, காந்திக்கு மிகவும் பிடித்த பாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலைத் தன் குரலிலேயே பாடி, பெரும் வெற்றிபெற வைத்தவர்.
அஸ்ஸாமிய பாரம்பரிய பாடல்களை இசையமைத்து, பாடல்கள் எழுதி இசை உலகுக்கு சிறப்பான பங்காற்றியவர்.
பாடகராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, இசை வல்லுநராக, திரைப்படத் தயாரிப்பாளராக பல்வேறு பரிணாமங்களைக் காட்டியவர் ஹஸாரிகா.
Comments


Click it and Unblock the Notifications