'பாம்' ரவி மனைவியும் இறந்தார்!
சென்னையில் சில தினங்களுக்கு முன் டம்மி பாம் வெடித்ததும் இதில் வீடுகள் சேதமடைந்ததும் நினைவிருக்கலாம். இந்த விபத்தில் படுகாயமடைந்த பாம் ரவி சில தினங்களுக்கு இறந்தார்.
அவருடன் சேர்ந்து படுகாயமடைந்த ரவியின் மனைவி ரத்னாவும் இன்று மரணமடைந்தார்.
பாம் ரவியின் வீட்டில் மறைத்து வைக்கபர்பட்டிருந்த சினிமா டம்மி குண்டுகள் கடந்த 1-ந்தேதி இரவு 7மணிக்கு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன. மூன்று வீடுகள் தரைமட்டமாகின.
இந்த இடிபாடுகளில் பாம் ரவி, அவரது மனைவி ரத்னா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் பாம் ரவி சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவி ரத்னாவும் மிகவும் மோசமான நிலையில் உயிருக்குப் போராடி வந்தார்.
நேற்று இரவு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரத்னா இறந்தார்.
பாம் ரவி-ரத்னாவுக்கு வருண்குமார் என்ற மகன் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.


Click it and Unblock the Notifications











