நடிகர், நடிகைகளுக்கு இலவச மருத்துவமுகாம்

நடிகர் சங்க வளாகத்தில் நேற்று இலவச மருத்துவமுகாம் நடந்தது. இதில் ஏராளமான நடிகர் நடிகைகள் பங்கேற்று செக்கப் செய்து கொண்டனர்.

நடிகர் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாடக நடிகர்களும் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் நலிந்த நிலையில் இருக்கிறார்கள்.

நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு பல்வேறு நலப்பணிகள் செய்யப்படுகிறது. உதவித்தொகை, கல்விக்கட்டணம் முதலியவை அளிக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

சென்னை தி நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த முகாம் நடந்தது. அரிமா சங்க தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். நடிகர் ராதாரவி, நடிகைகள் நளினி, குயிலி, பாத்திமா பாபு ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

மேலும் ஏராளமான நடிகர், நடிகைகள், நாடக கலைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இருதய நோய், சர்க்கரை நோய், நீரழிவு நோய் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஈ.சி.ஜி.யும் எடுக்கப்பட்டது.

முகாமில் மருத்துவ விழிப்புணர்வு சொற்பொழிவுகளும் நடந்தன.

நடிகர் சங்க அறக்கட்டளை, சென்னை அரிமா ஐக்கிய சங்கம், குளோபல் ஆஸ்பத்திரி, ஹெல்த் சிட்டி ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X