கமர்ஷியல் படம் எடுங்க! - டைரக்டர்களுக்கு ஹரி யோசனை

தனுஷ் நடித்த வேங்கை படத்தை முடித்துவிட்டு, வெளியீட்டுப் பணிகளில் பிஸியாக உள்ளார் ஹரி.
தொடர்ந்து வெறும் அடிதடி கமர்ஷியல் படங்களை மட்டும் எடுப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, "விருதுக்காக படங்கள் எடுப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அதுபோன்ற படங்களை எடுத்து தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்தக் கூடாது.
எல்லா இயக்குனர்களும் கமர்ஷியல் படங்கள் எடுத்து எல்லோருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த படத்தை சூர்யாவை வைத்து எடுக்கிறேன். அதுவும் பக்கா கமர்ஷியல்தான்", என்றார்.
Comments


Click it and Unblock the Notifications