கொழும்பு இந்திப் பட விழா- டிக்கெட் கட்டணம் அடியோடு குறைப்பு
கொழும்பு: கொழும்பில் இன்றுடன் முடிவடையும் சர்வதேச இந்தி திரைப்பட விழாவில் டிக்கெட் கட்டணம் அடியோடு குறைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுகததாசா உள்ளரங்கத்தில் இன்று விருது வழங்கும் நிகழ்ச்சியோடு இந்த விழா முடிவுக்கு வருகிறது.
இந்த விழாவுக்காக மிகப் பெரிய கட்டணத்தில் டிக்கெட்கள் விற்கப்பட்டன. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், ஆமிர்கான் என பல சூப்பர் ஸ்டார்கள் வருவதால் போட்டி போட்டுக் கொண்டு கொழும்புவாசிகளும் கட்டணத்தைப் பொருட்படுத்தாமல் டிக்கெட் வாங்கினர்.
ஆனால் ஒரு சூப்பர் ஸ்டாரும் வராமல் புறக்கணித்து விட்டதால் களையிழந்து போய் விட்டது இந்தப் பட விழா. இதையடுத்து சில உப்புக்குச் சப்பாணி நடிகர்களை வரவழைத்து விழாவை நடத்தி முடித்துள்ளனர். இன்று மாலை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்காக ரூ. 2 லட்சம் வரை டிக்கெட் போட்டு விற்றிருந்தனர். தற்போது இதை அடியோடு குறைத்து விட்டனர். ரூ.25,000 டிக்கெட் கிடைக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்களைப் பெறுவோருக்கு கடைசி வரிசையில் பெஞ்ச் போட்டு உட்கார வைப்பார்களாம்.


Click it and Unblock the Notifications











