பி.ஆர்.சோப்ரா மரணம்!

மகாபாரதம் என்ற வரலாற்று சிறப்பு பெற்ற தொலைக்காட்சித் தொடரை எடுத்துப் புகழ்பெற்றவர் சோப்ரா. 1950-ம் ஆண்டு முதல் அவர் பல திரைப்படங்ளை எடுத்திருந்தாலும், 1980-ல் அவர் தயாரித்து இயக்கிய பிரமாண்டமான மகாபாரதம்தான் அவரை புகழேணியின் உச்சிக்கு கொண்டு சென்றது.
அடிப்படையில் ஒரு சினிமா பத்திரிகையாளரான இவர், தனது முதல் படத்திலேயே அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவிடம் பாராட்டுப் பெற்றார்.
சோப்ரா இயக்கிய கடைசி படம் 1992-ல் வெளியான கல் கி ஆவாஸ். அதன்பிறகு அவர் மகன் ரவி சோப்ரா வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திகழ்கிறார்.
தனது தள்ளாத 94 வயதிலும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சாந்தாக்ரூஸிலுள்ள தனது பிஆர் பிலிம்ஸ் அலுவலகத்தைப் பார்வையிடும் அளவுக்கு உற்சாகமான மனிதராக வலம் வந்தவர் சோப்ரா.
1998-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவித்தது.
நீண்டநாள் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த சோப்ரா, இன்று அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.


Click it and Unblock the Notifications