சிவாஜியின் மூத்த மகன் நான்தான் - மு.க.அழகிரி

Sivaji Statue
மதுரை: நடிகர் திலகத்தின் மூத்த மகன்தான் நான்தான். அவரது சிலைக்கு தினமும் மாலை போடும் உரிமையை எனக்குத் தாருங்கள், என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார் மத்திய அமைச்சர் மு.க அழகிரி.

மதுரையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 8.5 அடிய உயர முழு உருவ வெண்கல சிலையை மத்திய ரசாயண மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி நேற்று திறந்து வைத்தார்.

விழாவுக்கு நடிகர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி முன்னிலை வகித்தார். சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் வரவேற்று பேசினார்.

அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார். விழாவில் மு.க.அழகிரி பேசுகையில்,

சிவாஜி கணேசனின் சிலையை திறப்பதில் எனக்கு சந்தோஷம் இருந்தாலும், என்னுடைய சித்தப்பா (சிவாஜி) சிலையாக மாறிவிட்டாரே என்று வருத்தமாக உள்ளது. நடிகர் பிரபு பேசும் போது, கமல் தான் சிவாஜியின் மூத்த மகன் என்று கூறினார். அது தவறு. உண்மையில் நான்தான் மூத்த மகன்.

என்னுடைய தந்தையும் (முதல்-அமைச்சர் கருணாநிதி), சித்தப்பாவும் தி.மு.க.வில் ஒன்றாக பாடுபட்டு வந்தார்கள். அந்த சமயத்தில் சிவாஜியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சிலர் தீர்மானம் போட்டு அண்ணாவிடம் கூட கொடுத்தார்கள். அப்போது சிவாஜி, அண்ணாவிடம் சென்று நான் தி.மு.க.வில் இருந்து விலகுகிறேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி வெளியேறினார்.

தி.மு.க.வில் இருந்து சிவாஜி விலகினாலும், என் தந்தையும் அவரும் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

என் தந்தை முன் மற்றவர்கள் சிகரெட் பிடிப்பதற்கு பயப்படுவார்கள். ஆனால் அவர் முன் சிவாஜி சிகரெட் பிடிப்பார். இதை ஏன் கூறுகிறேன் என்றால், அந்தளவுக்கு அவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். என் தந்தையை சிவாஜி, மு.க. என்று தான் அழைப்பார். அவரை என் தந்தை கணேசா என்று செல்லமாக அழைப்பார்.

சிவாஜிக்கு தந்த வாய்ப்பு

பராசக்தி படத்தில் முதலில் நடிக்க கே.ஆர்.ராமசாமி ஒப்பந்தம் ஆனார். ஆனால் அவரை அந்த படத்தில் இருந்து வெளியேற சொல்லி விட்டு, சிவாஜிக்கு எனது தந்தை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். சிவாஜியும் அந்த படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.

படத் தயாரிப்பாளரான ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் அந்த படத்தில் சிவாஜியின் நடிப்பு சரியில்லை அவரை நீக்கி விடுங்கள் என்று கூறினார். ஆனால் இதை கருணாநிதியும், இயக்குனரும் ஏற்காமல் தொடர்ந்து சிவாஜியை நடிக்க வைத்து அந்த படத்தை மாபெரும் வெற்றி பெற வைத்தனர்.

குறவஞ்சிக்காக கோணி உடை

குறவஞ்சி படத்தில் சிவாஜி ராஜாவாக நடித்தார். அதில் மாறுவேடம் போட்டு நகரில் நடக்கும் நிகழ்ச்சியை காண நாடோடி போல் வேஷம் போட வேண்டும். அதற்காக சிவாஜிக்கு ஒரு விலை உயர்ந்த ஆடை வழங்கப்பட்டது. உடனே சிவாஜி, அதை தூக்கிப் போட்டு விட்டு, ஒரு கோணியை உடையாக அணிந்து கொண்டு நடித்தார்.

அந்தளவுக்கு நடிப்பை நிஜமாக்குவார். அவருடைய வசந்த மாளிகை படத்தை பார்த்த போது, உண்மையில் அவர் குடித்து விட்டுத்தான் நடித்திருப்பார் என்று நினைத்தேன். அவருடைய படிக்காத மேதை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதேன்.

பிரபு மற்றும் அவர் குடும்பத்தாருக்கு ஒரு வேண்டுகோள். மதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு என் சார்பாக தினமும் மாலை போடப்படுகிறது. அதே போல் சிவாஜி சிலைக்கும் என் சார்பாக தினமும் மாலை போட அனுமதி தர வேண்டும். என் உயிருள்ளவரை மாலை அணிவிப்பேன்... என்றார் அழகிரி.

நடிகரும் மத்திய அமைச்சருமான நெப்போலியன், நடிகர் வடிவேலு உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X