ரம்லத் வழக்கை சந்திக்க பிரபுதேவா முடிவு!!

பிரபுதேவா, நயன்தாரா கள்ளக் காதல் மற்றும் திருமண முடிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பிரபுதேவா மனைவி ரம்லத் சென்னை குடும்ப நல கோர்ட்டில் இருவருக்கும் எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனை பிரபுதேவா எதிர்ப்பார்க்கவில்லை.பெரும் அதிர்ச்சி அடைந்த அவர், ரம்லத்தை சமாதானப்படுத்த முயற்சித்து அது தோல்வியில் முடிந்ததால் சட்ட ரீதியாகவே ரம்லத்தைச் சந்திக்க முடிவு செய்துள்ளார்.
ரம்லத் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 23-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. பிரபுதேவாவுக்கும் சம்மன் அனுப்பப்படுகிறது. அதை ஏற்று கோர்ட்டில் ஆஜராகிறார்.
ரம்லத்துக்கு எதிர் மனு தாக்கல் செய்ய வக்கீல்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம் கோர்ட்டுக்கு வெளியே சுமூகமாக இப்பிரச்சினை பற்றி பேசி தீர்வு காணலாம் என தூது அனுப்பும் முயற்சியையும் தொடர்கிறாராம்.


Click it and Unblock the Notifications











