சினேகா வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் தர யாருமில்லை!

நடிகை சினேகாவுக்கு தொடர்ந்து செல்போனில் ரொமான்டிக் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லைக் கொடுத்த பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா (வயது 33) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சினேகாவே கொடுத்த புகாரின் அடிப்படையில் இக்கைது நடந்தது.
பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் ராகவேந்திரா கைதாகி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராகவேந்திரா சார்பில் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டும் ரூ.1 லட்சத்துக்கு இருநபர் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ராகவேந்திரா கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். 21-ந் தேதி அன்று கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் இதுவரை அவருக்கு யாரும் ஜாமீன் கொடுக்க முன்வரவில்லை.
பெங்களூரில் வசிக்கும் பெற்றோர்கள் ராகவேந்திராவை எங்கள் மகன் இல்லை என்று கூறிவிட்டனர். அவரது சகோதரியும், மற்ற உறவினர்களும் ஜாமீன் கொடுக்க முன்வராமல் தவிக்க விட்டுவிட்டனர்.
ராகவேந்திரா சார்பில் ஆஜரான வக்கீல் எவ்வளவோ முயற்சித்தும் இதுவரை பலன் அளிக்கவில்லை. எனவே ஜாமீன் கிடைத்து 2 வார காலமாகியும் வெளியே வரமுடியாமல் ராகவேந்திரா தொடர்ந்து ஜெயிலிலேயே தவித்தபடி உள்ளார் ராகவேந்திரா.
ஏன் நடிகைகள் பின்னால் அலைவானேன், இப்படி ஜெயிலில் உழல்வானேன்..!


Click it and Unblock the Notifications











