ஜோதா அக்பருக்கு தடை நீக்கம்

ஜோதா அக்பர் படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்ததால் உ.பி. மாநிலத்தில் திரையிட அம்மாநில அரசு தடை விதித்தது. அதேபோல ஹரியானா மாநிலத்தின் அம்பாலா, சோனீபட்,ரேவாரி ஆகிய பகுதிகளில் திரையிட அந்த மாநில அரசும், உத்தரகாண்ட்டின் டேராடூனில் வெளியிட அந்த மாநில அரசும் தடை விதித்தன.
இவற்றை நீக்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பாளரான யுடிவி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மூன்று மாநில அரசுகளும் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஜோதா அக்பர் படத்தில் அக்பரின் மனைவியாக ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய் சித்தரிக்கப்பட்டுள்ளார். இதற்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உ.பி, ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய வட மாநிலங்களிலும் ராஜபுத்திர சமூகத்தினர் கடும் எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.
தியேட்டர்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்தே மேற்கண்ட 3 மாநிலங்களிலும் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஜோதா அக்பர் தமிழிலும் உருவாகியுள்ளது. தமிழ் டப்பிங் வெள்ளிக்கிழமை திரையிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications











